வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Murugan
Last Modified: சனி, 13 மே 2017 (13:59 IST)

தானும் கெட்டு நடிகையையும் கெடுத்த வெற்றி நடிகர்...

சினிமா விழாக்களில் கலந்து கொள்ளாத தன்னைப் போலவே தன்னுடைய தோழி நடிகையும் அந்த வெற்றி நடிகர் மாற்றிவிட்டதால், தயாரிப்பாளர்கள் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனராம்.


 

 
தான் நடித்த படங்களில் அதிக பிளாப் கொடுத்த நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் அந்த வெற்றி நடிகர். இவருக்கும் அங்காடி நடிகைக்கும் இடையே காதல் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள புதிய படம் விரைவில் வெளியாக இருக்கிறது. பொதுவாக அந்த நடிகர், தான் நடித்த பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. இந்த பட புரோமஷன் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாரிப்பாளர் அழைக்க, முடியாது என மறுத்து விட்டாராம். 
 
சரி.. இவர்தான் வரவில்லை, நடிகையாவது அழைப்போம் என தொடர்பு கொண்டால், அங்காடி நடிகை போனையே எடுக்கவில்லையாம்.  மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு மனம் வெறுத்துபோனாராம் தயாரிப்பாளர். புரமோஷன் நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்ள வேண்டாம் என நடிகர்தான் கூறியிருப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
 
இப்படி செய்யலாமா வெற்றி நடிகர்?