வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தகவல் தொழில்நுட்பம்
  4. »
  5. செய்திகள்
Written By Webdunia

நோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை தொடங்கியது

நோக்கியா நிறுவனம் தனது புதிய அறிமுகமான நோக்கியா லூமியா 925 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.34,169 என அறிவிக்கப்பட்டுள்ளது.
FILE

கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டு விற்பனைக்கான முன் பதிவுகள் பெறப்பட்டன. இப்போது விற்பனை மையங்களில் இது கிடைக்கிறது.

இதன் சிறப்பு அம்சங்கள்:-

4.5 அங்குல அகலத் திரை. சூப்பர் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன்.
போன் மேலாக மெட்டல் கவர்.
டூயல் கோர் குவால்காம் ப்ராசசர் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம்.
விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம்.
ஆப்டிகல் இமேஜ் திறனுடன் கூடிய 8.7 எம்.பி. கேமரா. எல்.இ.டி. ப்ளாஷ். வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்.
1.2 எம்.பி. திறனுடன் முன்புறக் கேமரா.

மேலும்...


ஐ.எச்.எப். ஸ்பீக்கர், இரண்டு மைக், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ.
புளுடூத் மற்றும் வைஃபை இணைப்பு.
வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 2000 mAh திறன் கொண்ட பேட்டரி
ராம் மெமரி 1 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி.
FILE

வெள்ளை, கிரே மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.
மேலே அறிவிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் சற்றுக் குறைவான விலையில், சில இணைய தளங்கள் இந்த மொபைல் போனை விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.