1. செய்திகள்
  2. »
  3. தகவல் தொழில்நுட்பம்
  4. »
  5. செய்திகள்
Written By Webdunia

செல்கான் கேம்பஸ் ஏ15 அறிமுகம்

மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்கள், செல்கான் கேம்பஸ் ஏ15 (Celkon Campus A15) என்ற மொபைல் போனைத் தேர்வு செய்யலாம்.
FILE

கேம்பஸ் என்ற வரிசையில், செல்கான் வெளியிடும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இது. அண்மையில், இந்நிறுவனம் செல்கான் ஏ10 என்ற ஸ்மார்ட் போனை 3ஜி போனாக வடிவமைத்து வெளியிட்டது.

கேம்பஸ் ஏ15, ஸ்மார்ட் போன் வரிசையில் 2ஜி போனாக வெளிவந்துள்ளது. இதன் திரை கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாக 3.5 அங்குல அகலத்தில் உள்ளது. இதில் 1 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர் இயங்குகிறது. இரண்டு சிம்களை ஒரே நேரத்தில் இயக்கலாம்.
FILE

ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2 சிஸ்டம் தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை, A2DP இணைந்த புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவை மற்ற சிறப்பு அம்சங்களாகும்.

256 எம்பி ராம் நினைவகம், 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதியுடன் 165 எம்பி ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 1,400 mAh திறன் கொண்டதாக உள்ளது. வெள்ளை வண்ணத்தில் இது வெளி வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,999.