வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தகவல் தொழில்நுட்பம்
  4. »
  5. செய்திகள்
Written By Webdunia

ஆப்பிளின் புதிய அறிமுகம்: ஐபோன் 5எஸ் மற்றும் ஐபோன் 5சி

FILE
ஆப்பிள் நிறுவனம் 2 புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்கிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான, விலை அதிகமான ஐபோன் 5எஸ் மற்றும் விலை குறைந்த ஐபோன் 5சி என்ற மாடலை அறிமுகம் செய்கிறது.

இதில் அதிவேகம், செயல்பாட்டு திறனில் மேம்பாடு, பல்வேறு ஆற்றல் திறன் கொண்ட புதிய கிராபிக்ஸ் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஐபோன் 5எஸ் மாடலில் தங்க நிறத்திலும் பாதுகாப்பு அம்சத்தில் கைவிரல் ரேகை பதிவு ஏற்புத்திறன் வசதியும் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் செயல் திறன் முறையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் சீனா உள்பட வளரும் நாடுகளின் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன. வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் ஐபோன் 5சி அறிமுகம் செய்யப்படுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
FILE

சீனாவிலும் புதன்கிழமை புதிய ஐபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. சீனா மார்க்கெட்டை குறிவைத்து காயை நகர்த்துகிறது ஆப்பிள் நிறுவனம். சீனாவில் சுமார் 70 கோடி பேர் மொபைல் போன் வாடிக்கையாளராக உள்ளனர்.
FILE

ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் தற்போது ஆன்ட்ராய்ட் தொழில்நுட்ப சாதனங்கள் நிறைந்த செல்போன்கள்தான் நான்கில் மூன்று பங்கு உள்ளன. எனினும், தனது பிரத்யேகமான ஐஓஎஸ் 7 தொழில்நுட்பத்தை பயன்படுத்திவரும் ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டுக்கான விற்பனையை 16.9 சதவீதத்தில் இருந்து 17.9 சதவீதமாக உயர்த்தும் என்று ஐடிசி ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.