நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படம் எடுக்கும் கேமரா அறிமுகம்
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லுந் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உலகில் அதிவிரைவாக படமெடுக்கும் கேமரா ஒன்றை உருவாகியுள்ளனர். இந்த கேமரா நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படம் எடுக்கும் தன்மை கொண்டது.
ஸ்வீடன் நாட்டில் உள்ள லுந்த பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உலகில் அதிவேக கேமரா ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இந்த கேமரா நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படங்கள் எடுக்கும் வல்லமை கொண்டது. இதன்மூலம் ஒளியின் பயணத்தை கூட பார்க்க முடியும்.
கண் இமைக்கும் நொடியில் 5 லட்சம் கோடி புகைப்படம். இது ஸ்லோ மோஷன் டெக்னாலஜியில் கலக்க புது அறிமுகம் என வல்லுநர்கள் பாராட்டியுள்ளனர். இந்த கேமரா விளையாட்டுத்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கேமராவை உருவாக்கிய ஆய்வாளர்கள் ஜெர்மன் நிறுவனத்துடன் சேர்ந்து இதை அதிக அளவில் தயாரித்து வருகின்றனர். விரைவில் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.