வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 22 ஜூன் 2017 (23:38 IST)

டோர் டெலிவரியில் 4G சிம். மளிகைக்கடையை விட மோசமாகிவிட்டதே!

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் மொபைலுக்கு சிம் வாங்க வேண்டும் என்றால் குதிரைக்கொம்பாக இருக்கும். ஆனால் இப்பொழுது இலவசமாக சிம் கொடுப்பது மட்டுமின்றி டோர் டெலிவரியும் செய்கின்றனர். இந்த டோர் டெலிவரி முறையை வழக்கம்போல் தொலைத்தொடர்பு துறையில் புரட்சி செய்யும் ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பித்து வைக்கவுள்ளது.



 


இலவசங்கள் நிறுத்திய பின்னர் ஜியோ சிம்மிற்கு ஏற்பட்டிருந்த மவுசு கொஞ்சம் குறைந்துவிட்டது. இதனால்ஜியோ வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் வகையில்  இந்தியா முழுவதும் 600 நகரங்களில், வீடு தேடி, 4ஜி சிம் கார்டுகளை டோர் டெலிவரி செய்யும் சேவையை ஜியோ தொடங்கியுள்ளது.

மை ஜியோ செயலியை ஸ்மார்ட்ஃபோனில் டவுன்லோட் செய்தபின்னர் அதில் சென்று, புதிய சிம் கார்டு கோரி விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து, வீடு தேடி, சிம் கார்டு விநியோகிக்கப்படும் என்று, ஜியோ தெரிவித்துள்ளது. இதேபோன்று, வைஃபை, டேட்டா கார்டு சேவைகளும் வழங்கப்படுவதாக, நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.