4ஜி செல்போன் ரூ.1000 : ரிலையன்ஸின் அடுத்த அதிரடி

4ஜி செல்போன் ரூ.1000 : ரிலையன்ஸின் அடுத்த அதிரடி


Murugan| Last Modified திங்கள், 14 நவம்பர் 2016 (19:48 IST)
ரிலையன்ஸ் ஜியோ என்ற 4ஜி இண்டர்நெட் சேவையை அறிமுகப்படுத்தி, புரட்சி செய்த ரிலையன்ஸ் நிறுவனம், அடுத்து மலிவான விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 

 
ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டை பயன்படுத்த 4ஜி செல்போன் வேண்டும். 4ஜி செல்போன் விலை ரூ.3000 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது. தற்போது அதிலிருந்தும் குறைந்த விலைக்கு, 4ஜி செல்போனை விற்பனை செய்யும் முடிவில் ரிலையன்ஸ் நிறுவனம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அதாவது, புதிய ரிலையன்ஸ் ஜியோ செல்போனின் விலை ரூ.1000 அல்லது ரூ.1500/- வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அந்த செல்போனில், ஸ்ப்ரெட்ரம் 9820 பிராசசர், அதிக திறன் கொண்ட கேமரா, பெரிய டிஸ்ப்ளே, வை-பை மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :