வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Updated : வியாழன், 14 ஜூலை 2016 (17:02 IST)

ரிலையன்ஸ் ஜியோவின் '4ஜி பிரீடம்' ஆகஸ்டில் அறிமுகம்

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ தனது சேவையை ஆகஸ்ட் மாதத்தில் முழுமையாக வணிகச் சந்தைக்கு அறிமுகம் செய்ய முடிவு உள்ளது.




நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் புதிதாகத் துவங்கப்பட்ட டெலிகாம் சேவை பிரிவு தான் இந்த ரிலையன்ஸ் ஜியோ. உலகிலேயே 1,50,000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டெலிகாம் சேவை துறையில் புரட்சி செய்ய வந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ.

அதிக மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நாடுகளில் டாப் 5 இடத்தில் இருக்கும் இந்தியாவில் ஏர்டெல், ஏர்செல், வோடாபோன், ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் அதிக கட்டணத்தில் சேவையை அளிக்கிறது. இத்தகைய போட்டி மிகுந்த சந்தையில் குறைவான கட்டணத்தில் யார் சேவை அளித்தாலும் மக்கள் அதை பயன்படுத்திக்கொள்வர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவே ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் சேவை கட்டணம் 25 சதவீதம் குறைவாக இருக்கும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவை அறிமுக நாளில் பிரீடம்  என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் இலவசம் அழைப்புகள், இலவச டேட்டா எனப் பல்வேறு விதமான சேவைகளை அளிக்க உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள டெலிகாம் சேவையில் 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்கு வெறும் 0.5 பைசா என்ற மிக மலிவான விலையை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்குச் சுமார் 5 பைசா வரையிலான கட்டணத்தை வசூல் செய்கிறது.

கடந்த 6 மாத காலமாகப் பல்வேறு பகுதிகளாகத் தனது டெலிகாம் சேவையை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ, ஆகஸ்ட் மாதத்தில் முழுமையான வணிகச் சந்தைக்குத் தனது சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்