7 நிமிடத்தில் விற்று தீர்ந்த மோட்டோ சி பிளஸ்!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 22 ஜூன் 2017 (10:20 IST)
விற்பனையில் மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போன் ஏழு நிமிடங்களில் முழுவதும் விற்று தீர்ந்ததாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. 

 
 
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ சி பிளஸ் பிளாஷ் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற்றது. நொடிக்கு நூறு மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் இன்றும் புதிய மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போன்  மீண்டும் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் பிளாஷ் விற்பனையின் ஏழு நிமிடங்களில் மட்டும் சுமார் 42,000 மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.6,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. கருப்பு, வெள்ளை மற்றும் கோல்ட் நிறங்களில் கிடைக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :