1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2016 (11:16 IST)

20 லட்சம் டவுன்லோட், 2 நாட்களில்: அந்த ஆப்!!

2ஜி நெட்வொர்க்களில் சிறப்பாக வேலை செய்யும் மொபிக்விக் செயலியின் லைட் வெர்ஷன் ஆப் வெளியான 2 நாட்களில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர். 


 
 
இந்தியாவில் ஆன்லைன் ரீசார்ஜ் சேவைகள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மொபைல் வாலெட் பிளேயரில் கிடைக்கும் மொபிக்விக் லைட் ஆப் வெறும் 1 எம்பி அளவு மட்டுமே இருக்கிறது. 
 
இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் மொபைல் வேலெட் சேவைகளை வழங்கும் பேடிஎம், மொபிக்விக் மற்றும் ஃப்ரீசார்ஜ் சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. 
 
மொபிக்விக் லைட் செயலியில் பண பிரமாற்றங்களை UPI மற்றும் வேலெட்களில் இருந்து பெற முடியும். 
 
மேலும், வங்கி சார்ந்த பரிமாற்றங்களும் மார்ச் 31, 2017 வரை மொபிக்விக் லைட் செயலியில் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆங்கிலம் மற்றும் இந்தியில் இந்த செயலியை பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் 
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து 80971-80971 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்தும் இந்த செயலியை டவுன்லோடு செய்யலாம்.
 
இதனை, மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களும், கூகுள் பிளே அக்கவுண்ட் இல்லாதவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.