1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Updated : செவ்வாய், 19 ஜூலை 2016 (12:33 IST)

ஃப்யூச்சர் பஸ், டிரைவர் இல்லாத மெர்சிடிஸ் பென்ஸ் தானியங்கி பஸ்

ஃப்யூச்சர் பஸ், டிரைவர் இல்லாத மெர்சிடிஸ் பென்ஸ் தானியங்கி பஸ்

டிரைவர் துணையில்லாமல் 20 கிமீ தூரம் சாதாரண போக்குவரத்து சூழலில் பயணித்து அசத்தியிருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ் தயாரித்திருக்கும் புதிய தானியங்கி பஸ்.




உலகிலேயே சாதாரண போக்குவரத்து சூழலில் இயக்கப்பட்ட முதல் தானியங்கி பஸ்ஸை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சோதனை ஒட்டத்தில் ஈடுபடுத்தி வெற்றிகண்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரிலுள்ள ஹார்லேம் என்ற இடத்திலிருந்து சிச்சிபோல் விமான நிலையத்துக்கு இடையிலான 20 கிமீ தூரத்திற்கு இந்த பஸ் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட டிரக்குகளுக்கான தானியங்கி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பஸ்சுக்கான சிறப்பம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஃப்யூச்சர் பஸ் என்ற தானியங்கி பஸ்ஸை உருவாக்கியது. இந்த பஸ்சில் விசேஷமான சிட்டிபைலட் என்ற தானியங்கி தொழில்நுட்பம் கொண்டது.

இதில், விசேஷம் என்னவெனில் பாதசாரிகள் குறுக்கிடும்போது தானாகவே பிரேக் பிடித்து நின்றதுடன், சிக்னல்களையும் சரியான கண்டுகொண்டு சிறப்பாக இயங்கியிருக்கிறது. இந்த பஸ் ஓடும்போது மட்டுமில்லாமல், பேருந்து நிறுத்தங்களையும் சரியாக அடையாளம் கண்டு நின்றதுடன், கதவுகளும் தானாகவே திறந்து மூடின. சுரங்கப்பாதையிலும் இந்த பஸ் சிறப்பாக இயங்கியது.  

இந்த பஸ்சில் ஒரு டஜனுக்கும் அதிகமான கேமராக்கள், சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் சாலையை சரியாக உணர்ந்து கொண்டு இந்த பஸ் பயணித்துள்ளது.