1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 1 ஏப்ரல் 2017 (13:30 IST)

ரூ. 300-ல் மோதிக்கொள்ளும் ஜியோ பிரைம், ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடோபோன், ஐடியா!!

முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியொ, ஏர்டெல், பிஎஸ்என்எல்,  வோடோபோன் மற்றும் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. 
 
\
 
 
 
இந்த ஐந்து நிறுவனங்களும் தற்போது ரூ.300-ல் நல்ல சலுகைகளை வழங்கியுள்ளனர். அவற்றில் சிறந்ததை பார்போம்...
 
ஜியோ பிரைம் ரூ.303 ரீசார்ஜ்: 
 
ரிலையன்ஸ் ஜியோ கட்டண சேவைகளை பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு பிரைம் எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரைம் திட்டத்தில் ரூ.149 முதல் விலை துவங்குகின்றன. இதில் தற்போது சம்மர் ஆஃபராக ரூ.303 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது 3 மாதங்களுக்கு டேட்டா பெற முடியும் என அறிவித்துள்ளது.
 
ஜியோவின் ரூ.499 ரீசார்ஜ் செய்து 120 ஜிபி டேட்டா பெற முடியும். இதே போல் ரூ.303 ரீசார்ஜ் செய்தால் 60 ஜிபி வரை பெறலாம். 
 
ஏர்டெல் ரூ.345 ரீசார்ஜ்:
 
ஏர்டெல் அறிவித்துள்ள ரூ.345 திட்டத்தில் 28 ஜிபி டேட்டா, தினமும் 1 ஜிபி (காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை 500 எம்பி மற்றும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 500 எம்பி) பயன்படுத்தலாம். 
 
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், வழங்கப்படுகிறது. 
 
வோடோபோன் ரூ.346 ரீசார்ஜ்:
 
வோடோபோன் அறிவித்துள்ள ரூ.346 திட்டத்தில் 28 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. 
 
தினமும் 1 ஜிபி என்ற டேட்டா அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
பிஎஸ்என்எல் ரூ.339 ரீசார்ஜ்:
 
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.339 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள்.
 
தினமும் 25 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகின்றது. 
 
ஐடியா ரூ.348 ரீசார்ஜ்:
 
ஐடியா ரீசார்ஜ் மூலம் 500 எம்பி அதிவேக டேட்டா, மாதம் முழுக்க 14 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.