ஆப்பிள் வாட்ச்சின் சிறப்பம்சங்கள்

Caston| Last Modified புதன், 7 அக்டோபர் 2015 (14:07 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பான ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆப்பிள் வாட்ச் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பார்க்கலாம்.

* ஆப்பிள் வாட்ச் மூலம் உங்கள் ஐஃபோனுக்கு வரும் குறுந்தகவல்களை அறியவும் பதிலளிக்கவும் முடியும் மற்றும் போனுக்கு வரும் அழப்புகளை ஏற்க முடியும்.

* இதன் வடிவமைப்பில் ஹாரோலோஜி பாரம்பரியம் கலந்திருப்பதோடு பார்க்க தனித்துவம் வாய்ந்ததாக காட்சியளிக்கின்றது.

* தற்போதைய வெப்பநிலையை அறிய முடியும்.

* ஐஃபோன்களை போன்றே ஆப்பிள் வாட்ச்களின் டிஸ்ப்ளே உறுதியாகவும் கீறல் படாத அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
* ஆப்பிள் வாட்ச் பயனாளிகள் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் நேரத்தையும், உடலின் கலோரி அளவையும் அளவிட முடியும்.

* ஆப்பிள் வாட்ச் உங்கள் உடலுக்கு எவ்வளவு உடற்பயிற்சி தேவை என்பதை தெரிவிக்கும். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாலும் தெரிய படுத்தும்.

* ஆப்பிள் வாட்ச் கிளான்சஸ்களை உங்களுக்கு ஏற்ற வாரு மாற்றியமைத்து கொள்ளலாம்.

* ஆப்பிள் வாட்ச் பயனர்கள் தாங்கள் வாட்ச் மூலம் ரெஸ்டாரண்ட்,தியாட்டர் முதலிய இடங்களில் பணம் செலுத்த முடியும்.

* ஆப்பிள் வாட்ச் டிஸ்ப்ளேவில் தெரியும் ஆப்ஸ்களை உங்களுக்கு ஏற்ற வாரு மாற்றியமைத்து கொள்ளலாம்.

* ஆப்பிள் வாட்சில் உள்ள மேப் நீங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு வழிநடத்தி செல்லும்.


இதில் மேலும் படிக்கவும் :