இனி ஃபேஸ்புக்கில் ஷாப்பிங் செய்யலாம்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 4 அக்டோபர் 2016 (15:38 IST)
ஃபேஸ்புக் நிறுவனம் ‘Marketplace' என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் பொருட்களை வாங்கவும், விற்கவும் முடியும்.

 

 
உலகில் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது அதன் பயனாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
‘Facebook Marketplace’ என்ற இந்த வசதி மூலம் நாம் உபயோகிக்கும் பொருட்களை விற்பனை செய்யலாம். பொருட்களை வாங்கவும் முடியும். இந்த புதிய வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் முதலில் நான்கு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 
 
அதன்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 18 வயது நிரம்பியவர்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இதில் மேலும் படிக்கவும் :