ரெட்மி 5 ஸ்மார்ட்போன்: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 4 ஜூலை 2017 (14:50 IST)
சீன நிறுவனமான சியோமி, ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனினை தயாரித்து வருகிறது என்றும் இவை விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

 
 
ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படலாம் என கூறப்படும் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் பின்வருமாறு சிறப்பம்சங்கள் இருக்க கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
# 5.5 இன்ச் FHD 1080 பிக்சல் டிஸ்ப்ளே, 64-பிட் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்,
 
# அட்ரினோ 508 கிராபிக்ஸ், யுஎஸ்பி டைப்: சி 3.1, 
 
# 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா, 
 
# 3 ஜிபி ராம்-க்கு 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம்-க்கு 64 ஜிபி மெமரி,
 
# கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்படலாம்,
 
# ஹோம் பட்டன் கைரேகை ஸ்கேனராக வேலை செய்யும்,
 
# விலை ரூ.13,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :