1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 17 ஜூலை 2016 (22:02 IST)

ஃபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

ஃபேஸ்புக்கில் உள்ள அனைத்து வீடியோவையும் எந்த ஒரு மென்பொருளின் துணை இல்லாமல் எளிதாக பதிவிறக்கம் செய்து விடலாம்.

 



 
இணையதளத்தில் வீடியோவை நாம் எளிதில் பதிவிறக்கம் செய்து விடுவோம். ஆனால் இந்த ஃபேஸ்புக்கில் உள்ள வீடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று தெரியாமல் ஒரு சில பிடித்த வீடியோவை விட்டுவிவோம்.
 
ஃபேஸ்புக்கில் உள்ள அனைத்து வீடியோவையும் எந்த ஒரு மென்பொருளின் துணை இல்லாமல் எளிதாக பதிவிறக்கம் செய்து விடலாம்.
 
இதற்கு பின்வரும் வழிமுறைய பின்பற்ற வேண்டும்:
 
நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோ கோப்பின் மேல் Right-Click செய்து Copy Link Address என்பதை சுட்டுக. இது சில இணைய உலாவிகளில் Copy Link Location என்றும் இருக்கலாம்.


 
 
பின் அதனை keepvid எனும் தளத்துக்குச் சென்று அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் Paste செய்யவும்.
 
பின்னர் Download எனும் Button ஐ அழுத்தும் போது குறிப்பிட்ட வீடியோ கோப்பினை தரவிறக்குவதற்கான இணைப்புடன் தோன்றும். 


 
 
இனி அந்த இணைப்பை சுட்டும் போது தோன்றும் புதிய சாளரத்தில் உங்கள் வீடியோ கோப்பு இயங்க ஆரம்பிக்கும்.
 
 
பிறகு அதனை Right Click செய்து Save Video என்பதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ கோப்பினை உங்கள் கணனியில் தரவிறக்கி சேமித்துக் கொள்ளலாம்.