ரூ.99ல் தொடங்கி பிஎஸ்என்எல் வழங்கும் மூன்று அதிரடி டேட்டா பேக்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 21 டிசம்பர் 2016 (11:00 IST)
புதிய திட்டமாக இருப்பினும் சரி, புதிய சலுகையாக இருப்பினும் சரி அனைத்துமே ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டி போடும் முனைப்பில் தான் வெளியாகின்றன. 

 
 
அந்த வகையில் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஜியோவிற்கு சமமான சலுகைகளை வழங்கத் தொடங்கியுள்ளது.
 
ரூ.99 டேட்டா பேக்:
 
பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள ரூ.99 பேக் அறிக்கையில் 300 எம்பி தரவு உட்பட பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு வழங்கப்படும். 
 
இது ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரூ.149 டேட்டா பேக்:
 
ரூ.149 திட்டம் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க் உடனாகவும் ஒரு மாத காலம் வரம்பற்ற குரல் அழைப்புகளை நிகழ்த்திக் கொள்ளலாம். இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
 
ரூ.339 டேட்டா பேக்:
 
ரூ.339/- பிஎஸ்என்எல் பான்-இந்தியா அடிப்படையில் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாக அறிமுகம் செய்துள்ளது. அனைத்து நெட்வொர்க் உடனான வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு மற்றும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது.


இதில் மேலும் படிக்கவும் :