ஏர்டெல், வோடோபோன் சலுகை: பயனர்களுக்கு லாபம் தருவது எது?


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 17 மார்ச் 2017 (13:14 IST)
ஜியோ இலவச சேவை இந்த மாதத்தோடு முடியும் நிலையில், ஜியோ பிரைம் என்ற அதிரடியை கையில் எடுத்தது ரிலையன்ஸ். இதற்கு போட்டியாக ஏர்டெல் மற்ரும் வோடோபோன் சில சலுகைகளை அறிவித்தது.

 
 
ஏர்டெல்: 
 
ஜியோவின் 303 திட்டத்துக்கு சரியான பதிலடி ஏர்டெல் 349 திட்டம். வேலிடிட்டி 28 நாட்களுக்கானது. தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா. ஆனால், 1 ஜிபியில் 500 எம்பியை அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் பயன்படுத்த வேண்டும். 
 
வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் கிடையாது. ரோமிங்கில் கட்டணம் உண்டு. வாய்ஸ் கால்களுகும் தினமும் 300 நிமிடங்கள், வாரம் 1200 நிமிடங்கள் லிமிட். அதைத் தாண்டினால் கட்டணம் உண்டு. 
 
ஆனால் ஏர்டெல் இந்த ஆஃபர் எல்லா வாடிக்கையாளருக்கும் கிடைக்காது. 
 
வோடோபோன்:
 
ஏர்டெல்லின் அதே கட்டணம் அதே சலுகைகளை தான் வோடோபோன் வழங்குகிறது. ஆனால், வோடோபோன் ஏர்டெல்லை  வெல்கிறது. வாய்ஸ் கால்களில் எந்த மாற்றம் இல்லை. தினம் 300 நிமிடங்கள் /வாரம் 1200 நிமிடங்கள் இலவசம். 
 
டேட்டாவும் தினம் 1 ஜிபி என 28 நாட்களுக்கு. ஆனால், அந்த ஒரு ஜிபியை பயன்படுத்துவதில் ஏர்டெல் போல வோடோபோன் எந்த லிமிட் வைக்கவில்லை.
 
கூடுதல் சலுகையாக, மார்ச் 15-க்குள் இந்த பிளானை தேர்வு செய்பவர்கள் கூடுதலாக 28 ஜிபியை பெறலாம்.


இதில் மேலும் படிக்கவும் :