செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 14 டிசம்பர் 2016 (19:01 IST)

மொபைல் பணப் பரிமாற்றம் பாதுகாப்பானதல்ல: பிரபல நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் மூலம் பணம் பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதல்ல என்று ஸ்மார்ட்போன்களுக்கு சிப்செட் தாயாரிக்கும் பிரபல நிறுவனமான க்வால்காம் தெரிவித்துள்ளது.


 

 
ஸ்மார்ட்போன் மூலம் பணம் பரிமாற்றம் செய்வது குறித்து ஸ்மார்ட்போன்களுக்கு சிப்செட் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் க்வால்காம் நிறுவனம் கூறியதாவது:-
 
இந்தியாவில் பணம் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தும் பெரும்பாலான ஆப்ஸ்கள் பாதுகாப்பானவை இல்லை. பணம் பரிமாற்றம் செய்வதற்கு மொபைல் போன்களில் பிரத்யேகமாக வன்பொருள் அமைப்பு பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 
 
ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட ஆப்ஸ்களில் பணம் பரிமாற்றம் பாதுகாப்பாக செய்வதற்கான வசதிகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.