டபுள் டேட்டா டமாகா ஆஃபர்: ஏர்டெல் அதிரடி!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 18 மே 2017 (15:32 IST)
தொலைதொடர்பு நிறுவனங்கள் பிராட்பேண்ட் டேட்டா சேவைகளையும் அதிவேக பிராட்பேண்ட் திட்டங்களையும் அறிவித்து வருகின்றன. 

 
 
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு பழைய கட்டணத்திலேயே 100% கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
 
புதிய சலுகை திட்டத்தின் படி மாதாந்திர பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் 100% கூடுதல் டேட்டா பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி..
 
# ரூ.899-க்கு வழங்கப்பட்ட 30 ஜிபி டேட்டாவுக்கு பதில் 60 ஜிபி டேட்டாவும்,
 
# ரூ.1,099-க்கு வழங்கப்பட்ட 50 ஜிபி டேட்டாவுக்கு பதில் 90 ஜிபி டேட்டாவும்,
 
# ரூ.1,299-க்கு வழங்கப்பட்ட 75 ஜிபி டேட்டாவுக்கு பதில் 125 ஜிபி டேட்டாவும்,
 
# ரூ.1,499-க்கு வழங்கப்பட்ட 100 ஜிபி டேட்டாவுக்கு 160 ஜிபி வழங்கப்படுகின்றது.
 
இத்துடன் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :