1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இஸ்லாம்
Written By Sasikala

நபிகள்நாயகம் கூறும் தவறு செய்வோரை திருத்தவதற்கான யோசனை!!

நம் கண்முன்னால் இன்று எத்தனையோ தவறுகள் நடக்கின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்துவது நம் கடமை. தவறு செய்வோரைத் திருத்தும்போது, அவர்களால் நமக்கு ஆபத்து வரலாம். எனவே சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து, தவறு செய்பவர்களைத் திருத்த முடியும் என்கிறார் நபிகள்நாயகம்.

 
இதோ அவரது கருத்து. உங்களில் யாராவது ஒருவர் ஒரு தவறைக் கண்டால் அதைத் தமது கரத்தால் மாற்றட்டும் அது இயலாவிட்டால் தமது நாவால் மாற்றட்டும், அதுவும் இயாலாவிட்டால் உள்ளத்தால் வெறுத்து விலகி விடட்டும், என்கிறார்.
 
தவறு செய்வதை நம் கரத்தால் தடுத்து நிறுத்தும் போது எதிராளி நம்மிடம் சண்டை போடலாம். அதைத் தவிர்க்க விரும்பும் பட்சத்தில், அவரை இனிய வார்த்தைகள் மூலம் புத்திமதி சொல்லி திருத்த முயற்சிக்கலாம். அதுவும் முடியாவிட்டால், தவறு செய்யும் அந்த நபருடன் இனி எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று விலகிப் போய் விடலாம். இதில் ஏதாவது ஒன்றைச் செய்து தவறு செய்வோரைத் திருத்த முயற்சியுங்கள்.