1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By
Last Updated : சனி, 22 ஏப்ரல் 2017 (19:47 IST)

தோனி அதிரடியில் புனே அணி த்ரில் வெற்றி

ஐ.பி.எல். தொடரில் இன்றைய முதல் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. புனேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார்.


 


இதையடுத்து சன்ரைசஸ் அணி பேட்டிங் செய்தது. அணியின் டேவிட் வார்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஐதராபாத் அணி 8.1 ஓவரில் 55 ரன்கள் எடுத்திருக்கும்போது தவான் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 14 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டேவிட் வார்னர் 43 ரன்களும், ஹென்றிக்ஸ் 55 ரன்கள் எடுத்தனர்.  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய புனே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியில் அதிகபட்சமாக தோனி 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். ராகுல் திரிபாதி 59 ரன்கள் குவித்தார்.