1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Sasikala
Last Modified: சனி, 13 மே 2017 (12:00 IST)

வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் குஜராத்தை சந்திக்கும் ஐதராபாத்!

கான்பூரில் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஷும், சன்ரைஸர்ஸ்  ஐதராபாதும் மோதுகின்றன.

 
ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவு இல்லை) 15 புள்ளிகள்  பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய லீக் ஆட்டம் ஐதராபாத் அணிக்கு வாழ்வா-சாவா? போட்டியாகும்.  இதில் வெற்றி பெற்றால் ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
 
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி தோல்வி கண்டால் அடுத்த சுற்று வாய்ப்புக்காக நாளை நடைபெறும் புனே-பஞ்சாப் அணிகள்  இடையிலான ஆட்டத்தின் முடிவுக்காக காத்து இருக்க வேண்டும். அதில் பஞ்சாப் அணி தோல்வி கண்டால் மட்டுமே ஐதராபாத்  அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிக்கும்.