இப்படியும் ஒரு கிரிக்கெட் ரசிகரா?: சென்னை டெஸ்ட் போட்டியில் சுவாரஸ்யம்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 21 டிசம்பர் 2016 (16:49 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இந்திய நாட்டின் ஜெர்சியை விரும்பி அணிந்துகொண்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 759 ரன்கள் குவித்து இருந்தது. இதனையடுத்து இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருந்த வேளையில் இங்கிலாந்து ரசிகர் ஒருவர் இந்திய அணியின் ஜெர்சியை வாங்கி விரும்பி அணிந்துகொண்டது சுவாரஸ்யத்தை அளித்தது.

வீடியோ இங்கே:

 

 


இதில் மேலும் படிக்கவும் :