’கல்யாணம் பண்ணிக்கிறாயா?’ - ஒலிம்பிக்கில் நடந்த சுவாரஸ்யம் [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (11:54 IST)
ஒலிம்பிக் போட்டியின் போது சீன வீரர் ஒருவர் யாரும் எதிர்பாராத வகையில் தனது சக நாட்டு வீரரும், தனது தோழியுமான பெண் ஒருவரிடம் திருமணத்திற்கான சம்மதத்தைக் கேட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
 
 
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஞாயிறன்று பெண்களுக்கான மூன்று மீட்டர் வளையும் மேடையிலிருந்து நீரில் தலைகீழாக குதிக்கும் போட்டியில் சீன வீரர் ’ஹெ ஷீ’ வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
 
அடுத்த சில மணித் துளிகளில் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவரின் ஆண் நண்பரும், சக நீரில் குதிக்கும் வீரருமான ’கின் கய்’ மேடைக்கு வந்து அவரை நெருங்கினார்.
 
மில்லியன் கணக்கில் கூடியிருந்த பார்வையாளர்களுக்கு மத்தியில் மண்டியிட்டு, அவரின் முன் தங்க மோதிரம் ஒன்றை நீட்டி ‘திருமணம் செய்து கொள்ளலாமா? என்றார். பிறகு, அதே மேடையில் ’ஹெ ஷீ’-க்கு, ’கின் கய்’ மோதிரம் அணிவித்து மகிழ்ந்தார்.
 

 
இதனை சற்றும் எதிர்பார்க்காத ’ஹெ ஷீ’ அதிர்ச்சி அடைந்தாலும், பின்பு வெட்கப் புண்ணகையோடு அவரது காதலை ஏற்றுக்கொண்டார். சீன நீச்சல் வீரர் ’கின் கய்’ 3 மீட்டர் மேடையில் இருந்து, குதிக்கும் நீச்சல் பிரிவில் கடந்த வாரம் வெண்கலப்பதக்கம் பெற்றார்.

வீடியோ இங்கே:

 


இதில் மேலும் படிக்கவும் :