1. செய்திகள்
  2. சுதந்திர தின சிறப்பு பக்கம்
  3. பட தொகுப்பு
Written By Sasikala
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (17:06 IST)

தேசப்பிதா அன்னல் காந்தியடிகளின் இளமைக்காலப் புகைப்படங்கள்!!

இந்திய சுதந்திர தினம் 1947 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.  நாம் 70ஆம் ஆண்டு சுதந்திரம் தினத்தை இந்த ஆண்டு கொண்டாடுகிறோம். நாம் 70 ஆண்டுகளில் செல்வந்த இந்தியாவின் கலாச்சாரத்தை மற்றவர்கள் போற்றும் வகையில் முனைப்புடன் வாழ்கிறோம்.


 
 
உலக வரலாற்றில் வேறு எவரும் பயன்படுத்தாத இரண்டு ஆயுதங்களை இவர் பயன்படுத்தினார். பீரங்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும் பெயர்போன காலனித்துவ ஆட்சியியாளர்கள்கூட கடைசியில் தோற்றுப்போய் இவருக்குத் தலை வணங்கினர். அவர்தான் அகிம்சை, வாய்மை என்ற இரண்டு உன்னத பண்புகளை வாழ்ந்து காட்டிய இந்தியாவின் தேசப்பிதா  அன்னல் காந்தியடிகள்.


 
 
1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் மீனவ கிராமத்தில் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அவரது தந்தை காபா கரம்சந்த் காந்தி 25 வயதிலேயே அமைச்சரானவர். தாயார் பெயர் புத்திலிபாய்.


 
 
அந்தக்காலத்தில் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் பரவலாக இருந்ததால் 13 ஆவது வயதிலேயே  காந்திக்கு திருமணம் நடைபெற்றது கஸ்தூரிபாய் என்ற பெண்ணை அவர் மணந்துகொண்டார்.


 
 
1893 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். அந்தப் பயணம்தான் காந்தியின்  வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. உலக வரலாறு மஹாத்மா எனற பட்டத்தை வழங்கி கவுரவித்திருக்கும் ஒரே சரித்திர நாயகர்.

ற பட்டத்தை வழங்கி கவுரவித்திருக்கும் ஒரே சரித்திர நாயகர்.உலக வரலாறு மஹாத்மா எனற பட்டத்தை வழங்கி கவுரவித்திருக்கும் ஒரே சரித்திர நாயகர்.