திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. சுதந்திர தின சிறப்பு பக்கம்
  3. பட தொகுப்பு
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (15:18 IST)

ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய சுபாஷ் சந்திர போஸ்!!

நாம் இன்று 70ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய  ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர் சுபாஷ் சந்திர  போஸ். 70 ஆண்டு சுதந்திர தினத்தில் அவரை நினைவு கூறும் வகையில், அவரை போற்றி வணங்குவது நம்முடைய கடமையாகும்.

 
சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது  வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை  உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

 
தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயனிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன்  படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார்.

 
ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக்  கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ், காந்திக்கும்  போஸுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது. காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போஸின் முடிவை  நேரு ஆதரித்தார்.

 
1939 இல் சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். போஸ். 1,580 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். சீதாராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று வெளிப்படையாகவே காந்தி  தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1939 இல் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியை தொடங்கினார். 1938-ல் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.