புதன், 6 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2023 (09:06 IST)

சர்க்கரை நோயாளிகள் குடிக்க சரியான டீ வகைகள்!

Green Tea
பலருக்கும் காலை எழுந்ததுமே டீ குடிப்பது அன்றாட பழக்கமாக உள்ளது. ஆனால் நீரிழிவு நோய் வந்துவிட்டால் டீயை மிஸ் பண்ண வேண்டியதுதான் என்ற நிலை உள்ளது. அவர்களும் குடிக்க ஆரோக்கியமான சில டீ வகைகள் குறித்து காண்போம்.


  • க்ரீன் டீ உடலுக்கு புத்துணர்ச்சியையும், பல ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியது. இது ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க உதவும்.
  • ப்ளாக் டீ எனப்படும் பால் கலக்காத டீ இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துகிறது.
  • கெமோமில் டீ எனப்படுவது டீத்தூள் போன்ற காஃபின் பொருட்கள் இல்லாமல் வாசனை பூக்களால் தயாரிக்கப்படும் தேநீர் ஆகும்.
  • காஃபின் இல்லாத இந்த கெமோமில் டீ தூக்கத்தை ஊக்குவிப்பதோடு, இன்சுலின் உற்பத்தியை குறைக்க உதவும்.
  • செம்பருத்தி டீயில் கரிம அமிலங்கள், அந்தோசயினின்கள் உள்ளது. இது ரத்த அழுத்தம், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • உயர் ரத்த சர்க்கரை பிரச்சினை உள்ளவர்கள் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் உள்ள மஞ்சள் தேநீரை பருகலாம்.
  • எந்த தேநீர் பருகலாம் என்பது குறித்து மருத்துவரின் ஆலோசனையை பெற்று பருகுவது நல்லது.