வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By sinoj
Last Modified: சனி, 25 செப்டம்பர் 2021 (00:47 IST)

வறுத்த பூண்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?

வறுத்த பூண்டு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் இதய் நோய், மாரடைப்பு, பெரும் தமனி அடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுப்பதோடு, இரத்த நாளங்களை பாதுகாக்கும்.
 
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்கிறது. மேலும் எலும்புகளை பலமாக வைத்துக்கொள்கிறது.
 
 
வறுத்த 6 பூண்டு சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு இரைப்பையில் உணவு நன்கு செரிமானம் அடைய உதவுகிறது மற்றும் இது ஒரு  சிறந்த உணவாக பயன்படுகிறது.
 
உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் கெட்ட நீர்மச்சத்து மற்றும் கொழுப்பு சத்தை வெளியேற்றுகிறது. கொலஸ்ட்ராலின் அளவை  சீராக வைத்துக்கொள்கிறது.
 
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியாக்கள் இரத்த நாளன்களுக்குள் சென்று உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. பூண்டு மருத்துவக் குணத்தால் உடலின் சோர்வை நீக்குகிறது. மேலும் உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்கிறது. 
 
வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் எற்படும் புற்று நோய் செல்களை அழிக்க  பயன்படுகிறது.
 
உடலில் உள்ள தமனிகளை சுத்தம் செய்து இதயநோய் வராமல் தடுத்து காத்துக் கொள்கிறது. பூண்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமாக  இருக்கிறது.