புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By sinoj kiyan
Last Updated : புதன், 15 ஜனவரி 2020 (15:49 IST)

முகத்தில் இறந்த செல்களை நீக்கி பொலிவடைய செய்யும் தக்காளி சாறு...!

தக்காளியில் ப்ளீச்சிங் தனமை உள்ளது. தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.
தக்காளி சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.
 
தக்காளியை துண்டை தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
 
பருக்களால் ஏற்படும் தோல் சிவத்தலை குறைக்கிறது. முகச்சருமத்தில் இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.
 
தக்காளியை மசித்து அதனுடன் கிளிசரின் கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி  பளபளக்கச் செய்யும். 
 
கரும்புள்ளிகளை நீக்குகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது.
 
ஆண்டிஆக்ஸிடண்ட் கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது.
 
தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது.