முடி உதிர்வை தடுத்திடும் இயற்கை வைத்திய குறிப்புகள்!
அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை ஆகியவற்றைத் தலா ஒரு க எடுத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டுப் பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள். இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒருநாள் வைத்திருந்தால் தெளிந்துவிடும். தெளிந்த எண்ணெயைத் தனியாகப் பிரித்துச் சேமியுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.
கொத்து வேப்பிலையை எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு, தட்டு போட்டு மூடி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை அப்படியே இறக்கி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வேப்பிலைகளை எடுத்து விட்டு, அந்தத் தண்ணீரில் கூந்தலை அலச வேண்டும். வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும். முடி உதிர்வது தடுத்து நிறுத்தப்படும்.
வெந்தயம், குன்றிமணி இரண்டையும் பொடி செய்து, ஒரு வாரம் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். அவுரி, கரிசாலை, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் மூன்று வேளை 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் தலைமுடி நன்கு வளரும். முடி உதிர்தல் பிரச்சினை குறையும்.
கற்றாழையின் சதைப்பகுதியை துண்டுதுண்டாக நறுக்கி, இதன் சம அளவிற்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சேர்த்து சுண்ட காய்ச்ச வேண்டும். பிறகு இந்த தைலத்தை தண்ணீர் படாமல் பாட்டிலில் சேகரித்து தினந்தோறும் தடவி வந்தால் முடி உதிர்வது நிற்பதோடு தலை முடி நன்றாக வளரும்.
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வெட்டிவேர், அதிமதுரம், நெல்லிக்காய், கடுக்காய் போன்றவற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து எண்ணெய் காய்ச்சலாம். இந்த எண்ணெயை முடிக் கால்களில் படுவதுபோல் தேய்க்க வேண்டும். 20 நிமிடம் வரை விடலாம். பொடுகு அதிகம் உள்ளவர்கள் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயை புளிக்காத மோருடன் கலந்து தேய்த்துக் குளிக்கலாம்.