1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By sinoj
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (21:40 IST)

சீந்தில் கொடி மூலிகை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா...?

ஆயிர்வேதத்தில் நாள்பட்ட இருமல், ஆஸ்துமா மற்றும் ஆஸ்துமா தொடர்புடைய அறிகுறிகளை நிவர்த்தி செய்வதற்கு சீந்தில் கொடி பயன்படுத்தப்படுகிறது.

சீந்தில் கொடி மூலிகையை ஒவ்வாமை எதிர்ப்புக்கு பயன்படுத்தலாம். ஆயிர்வேதத்தில் அம்ருதவல்லியை அஜீரணம் மற்றும் வயிறு வீக்கத்திற்கு மருந்தாக  பயன்படுத்துகின்றனர்.

இதை ஆயுர்வேத நூல்களில் அம்ரிதா, சின்னரூஹா, மதுபானி, தந்திரிகா, குண்டலினி என்கிற பெயரால் குறிப்பிடுகிறார்கள். இலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது சீந்தில். செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. 

தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் காய்ச்சலைத் தீர்க்கக் கூடியது. வீக்கத்தைக் கரைக்கக்கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது.  காம உணர்வைத் தூண்டக் கூடியது.

வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது என எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி. சீந்தில் கொடியை டீ நீர் வாத சுரத்தையும், பித்த  சுரத்தையும் தணிக்கும் வல்லமை கொண்டது. சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மாவு (சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேர்கிற அமிலத் தன்மையினைப்  போக்கக் கூடியது. 

வயிற்றுப்போக்கை வற்றச் செய்வது. சீத பேதியைக் குணப்படுத்தக்கூடியது. ஆயுர்வேத மருத்துவ நூல்கள் உலர்ந்த சீந்திலை மஞ்சள் காமாலையை குணமாக்கவும்,  ரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரை செய்கிறது.