1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2019 (11:59 IST)

உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கிறதா? இதை மட்டும் செய்து பாருங்கள்!

முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். வெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும் இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்தில் உள்ள மெலனின் அளவு அதிகரிப்பால் தான். இதைத் தவிர்க்க, பியூட்டி பார்லருக்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே தினமும் அரை மணி நேரம் செலவு செய்தால் போதும். எப்போதும் பிரெஷ்ஷாக இருக்கலாம்.

 
 
1. உருளைக்கிழங்கு:- 
 
உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.
 
2. வெந்தயக் கீரை :- 
 
வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.
 
3. கொத்தமல்லி தழை:- 
 
கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.
 
4.  எலுமிச்சை சாறு :- 
 
எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.
 
5. ஓட்ஸ் :- 
 
கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்து என்னவென்றால் ஓட்ஸை பவுடர்செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.
 
6. தயிர் :- 
 
இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.
 
7. தக்காளி:- 
 
தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.
 
8. பேக்கிங் சோடா:- 
 
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.
 
9. தேன்:- 
 
தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும்.மேலும் இதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். 
 
10. க்ரீன் டீ :- 
 
தினமும் க்ரீன் டீயின் இலைகளைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்குவதோடு சருமமும் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்திடுங்கள்.


 
மேற்கூறிய குறிப்புகளையெல்லாம் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீக்கி அழகான சுத்தமான சருமத்தை பெறலாம்.