கோபத்தால் என்ன பாதிப்புகள் வரும்?
.
கோபப்படும்போது சத்தமாக கத்தி நம் கோபத்தை வெளிப்படுத்துகின்றோம். அதற்கு பின்னால் 6-8 மணிநேரம் நம் உடல் சோர்வாகவும் அந்த நாள் முழுவதும் ஏதோ ஒரு பாதிப்பு ஏற்படுவதைப் போன்று மனதில் பாரம் இருக்கும்.
பத்து வினாடிகள் கோவபப்படுவதால் அதிலிருந்து மீண்டு வருவதற்கு 8 மணிநேரம் ஆகும்.ஏனென்றால் நம் கோவப்படுவதினால் நம் உடலில் உள்ள கார்ஸ்சிஸ்ரான் அதிக அளவில் சுரக்கின்றன மற்றும் உடலில் உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டமும் குறைகிறது.
மேலும் பல அமிலங்கள் நம் உடலில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் நேரடியாக அல்லது மறைமுகமாக உடல் உறுப்புகள் பாதிப்படைகின்றன.
அட்ரீனல் சுரப்பிகள் அதிகமாக சுரக்கின்றன. இதனால் நம்முடைய சராசரி செயல்திறன். சராசரியாக செயல்படுவதில் இருந்து 60-80 சதவீதம் குறைகிறது.
நாம் புகைபிடிப்பது, தண்ணி அடிப்பது, கெட்ட பொருட்களை நம் உடலில் சேர்க்காமல் இருந்தாலும், கோபப்படுவதால் நம் உடலை பாதிக்கிறது. எனவே கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.