அவதார் 4 பாகங்களின் ரிலிஸ் தேதி – டிவிட்டரில் அறிவித்த ஜேம்ஸ் கேமரூன் !

Last Updated: புதன், 8 மே 2019 (15:32 IST)
உலகளவில் வசூல் சாதனைப் புரிந்த அவதார் படத்தின் அடுத்த பாகம் எப்போது ரிலிஸ் ஆகும் என்பது குறித்து இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

உலகையே தனது டைட்டானிக் படத்தின் மூலம் கலக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் தனது அடுத்த படமான அவதாரை கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதன் அடுத்த பாகம் எப்போது என ரசிகர்கள் காத்திருக்க குழந்தைக்கு நிலாவைக் காட்டி சோறூட்டுவது போல இதோ அதோ என இழுத்தடித்து வந்தனர்.

கடைசியில் ஒருவழியாக டிசம்பர்  2020-ல் அவதார் 2  ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த தேதியையும் மாற்றி டிசம்பர் 17 2021ம் ஆண்டு வெளிவரும் என ஜேம்ஸ் கேமரூன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இதன் அடுத்தடுத்த பாகங்களான  அவதார் 3 2023ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, `அவதார் 4' டிசம்பர் 19ம் தேதி 2025ம் ஆண்டிலும் `அவதார் 5' டிசம்பர் 17ம் தேதி 2027ம் ஆண்டிலும் முறையே வெளிவரும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :