1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (10:36 IST)

குளியல் தொட்டியில் இறந்து கிடந்த ‘ப்ரெண்ட்ஸ்’ நடிகர்! – ரசிகர்கள் அதிர்ச்சி!

Mathew Perry
பிரபலமான சிட்காம் தொடரான ப்ரெண்ட்ஸில் நடித்த நடிகர் மேத்யூ பெரி காலமானார்.



அமெரிக்காவில் புகழ்பெற்ற காமெடி நாடகங்களை சிட்காம் என்பர். அந்த சிட்காம் தொடர்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அப்படியாக பிரபலமான சிட்காம் தொடர்களில் ஒன்று ப்ரெண்ட்ஸ். 1994 முதல் 2004 வரை 10 ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த தொடரில் சாண்ட்லர் பிங் என்ற காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் மேத்யூ பெரி.

மேத்யூ பெரி மேலும் பல டிவி தொடர்களிலும், ஹாலிவுட் திரைப்படங்களிலும் கூட நடித்துள்ளார். தற்போது 54 வயதாகும் மேத்யூ பெரி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டு குளியல் தொட்டியில் அவர் இறந்து கிடந்துள்ளார். அவரது இறப்பிற்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K