என் படத்தை தயவுசெய்து குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம். பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா நடித்த ஹாலிவுட் படமான 'பே வாட்ச்' இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க வேண்டாம் என்று பிரியங்கா சோப்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிகினி உடை உள்பட பல காட்சிகளில் படு கவர்ச்சியாக பிரியங்கா சோப்ரா இந்த படத்தில் நடித்துள்ளார். WWW புகழ் ராக் நடித்திருக்கும் இந்த படம் ஆக்சன் மற்றும் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லா படம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படம் குறித்து கூறுகையில் இந்த படம் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பது உறுதி என்றும், இரண்டாம் பாகத்திலும் ராக், மற்றும் பிரியங்கா சோப்ராவே நடிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.