ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (12:28 IST)

அவதாரை முறியடித்த அவெஞ்சர்ஸ்: உலக வசூலில் முதல் இடம்

உலக திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் முதலிடத்தில் இருந்த அவதார் திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்”.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ல் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் அவதார். மிகப்பெரிய விளம்பரங்கள் ஏதுமின்றி வெளியானாலும் அன்றைய நாளில் உலகமெல்லாம் பல மாதங்கள் திரையிடப்பட்டது அவதார். 10 வருடங்களுக்கு முன்பே 2.789 பில்லியன் டாலர் வசூல் செய்து உலக சாதனை படைத்தது.

அதற்கு பிறகு 10 வருடமாக அந்த சாதனையை வேறு எந்த திரைப்படங்களாலும் முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில் மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர்ஹீரோ படமான “அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்” வெளியாகி 13 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் 2.790 பில்லியன் டாலர் வசூல் செய்து அவதாரின் சாதனையை முறியடித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இதை அதிகாரப்பூர்வமாக மார்வெல் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. ராபர்ட் டோனி, கிரிஸ் இவான்ஸ், ஹெம்ஸ்வொர்த், ஸ்கார்லட் ஜோஹான்ஸன் போன்ற பலர் இணைந்து நடித்த இந்த திரைப்படம் அவெஞ்சர்ஸ் காமிக்ஸ் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.