சைனாவில் அவதாரை பின்னுக்கு தள்ளி அதகளம் செய்யும் எந்திரங்கள்
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் சீரிஸின் 4 -வது பாகமான ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் - ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்ஷன் (Transformers: Age of Extinction) சென்ற வெள்ளிக்கிழமை யுஎஸ்ஸில் வெளியானது. முதல் மூன்று தினங்களில் அதாவது வெள்ளி, சனி, ஞாயிறில் மொத்தமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை படம் வசூலித்தது. இந்த வருடத்தில் இதுதான் டாப் ஓபனிங்.
யுஎஸ்ஸில் வெளியான அதேநாள் சைனாவிலும் படம் வெளியானது. அதே முதல் மூன்று தினங்களில் 90 மில்லியன் டாலர்களை படம் வசூலித்தது. யுஎஸ்ஸைவிட பத்து மில்லியன் டாலர்கள் குறைவு.
திங்கள்கிழமை (ஜுன் 30) யுஎஸ்ஸில் இப்படம் 10.5 மில்லியன் டாலர்களும், செவ்வாய்க்கிழமை 10.4 மில்லியன் டாலர்களுமாக மொத்தம் 20.9 மில்லியன் டாலர்களை வசூலித்து.
சைனாவில் அதே இரு தினங்களில் 44 மில்லியன் டாலர்களை படம் வசூலித்து சாதனைப் படைத்தது. செவ்வாய்க்கிழமை வரை இந்தப் படத்தின் யுஎஸ் வசூல் 120.9 மில்லியன் டாலர்கள். சைனாவில் 134 மில்லியன் டாலர்கள். யுஎஸ்ஸைவிட பல மில்லியன்கள் அதிகம். சைனாவில் ஒருபடம் இப்படி அதகளம் செய்வது இதுதான் முதல்முறை.
சைனாவில் அவதாரின் 127 மில்லியன் வசூலை இப்படம் அனாயாசமாக கடந்திருப்பது பெரும் சாதனை. யுஎஸ், சைனா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த எந்திரங்கள் வசூலில் சக்கைப்போடு போடுகிறது.