துர்க்கை அம்மனை ஆலயத்தில் வழிப்படும் முறை


Sasikala| Last Modified வெள்ளி, 11 டிசம்பர் 2015 (15:43 IST)
துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான செல்வங்களும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும்.
தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வாழிப்பட வேண்டும்.

 

 
துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க் கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும். இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும். துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.
 
நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எலுமிச்சம் பழங்களை வாங்கி அவைகளை இரண்டாக குறுக்கு வசத்தில் அறுத்துச்சாறு பிழிந்துவிட்டு, குப்புறக் கவிழ்த்து கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.
 
அதன் பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழ கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்ய வேண்டும்.
 
ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது. ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும். பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.

எலுமிச்சை பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர், அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள். பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள்.
 
பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிராகரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :