1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. We know the anointing of idols and its benefits

விக்கரகங்களுக்கு செய்யும் அபிஷேக பொருட்களும் அதன் பயன்கள் அறிவோம்!

spirituality
ஒவ்வொரு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யும்போது ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.
 
முக்தி கிடைக்க: இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.
 
நீண்ட ஆயுள்: சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.
 
குடும்ப ஒற்றுமை: குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
 
நல்வாழ்க்கை அமைய: நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது உங்கள் வீட்டில்.
 
நினைக்கும் காரியம் நிறைவேற: சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.
 
பிணிகள் தீர: கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.
 
குழந்தை பாக்யம் பெற: நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும்.
 
செல்வம் சேர: பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித  செல்வங்களையும் அடையலாம்.
 
பாவங்கள் கரைய: பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய  உதவும்.
 
அடுத்த கட்டுரையில்
இராமேஸ்வரம்; 22 தீர்த்தங்கள் அதன் பயன்கள்...