திங்கள், 13 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

வயலோகம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

வயலோகம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வயலோகத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. 


 
 
இக்கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா வைகாசி திருவிழா, மஞ்சள் நீராட்டுவிழா மற்றும் தேரோட்டம் மிகவும் பிரசித்து பெற்றது.
 
முத்து மாரியம்மன் கோவில்
 
இக்கோவில் வைகாசி விழா, வைகாசி மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கும். அதைத்தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
 
தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்னால், கோவில் முன்பு அனைவரும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் போட்டும், அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும், தங்களது நேர்த்திகடனை செலுத்துவார்கள்.
 
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகப் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுப்பதுண்டு. தேரோட்டம் முடிந்த மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாநடைப்பெறும். இந்த விழாவில் ஆண்களும், பெண்களும் மஞ்சள் தண்ணீரை ஒருவர் மேல் ஒருவர் ஊற்றியும், வண்ணப்பொடிகளை பொடிகலை பூசியும் மகிழ்வார்கள்.
 
திருவிழாவைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அன்ன வாகனம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். இதையடுத்து மண்டகபடிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவதுண்டு.
 
தேரோட்டம்


 
 
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தின் போது அம்மனை தேரில் எழுந்தருள செய்தனர். அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பதுண்டு. தேர் அலங்காரத்துடன், பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க, செண்டை மேளம், நாதஸ்வரம் இசைக்க முக்கிய வீதிகள் வழியாக ஆடி, அசைந்தாடி சென்று அதன் நிலையை அடையும்.
 
வழி நெடுகிலும் திரளானோர் கூடி நின்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்வர். இதில் அன்னவாசல், பரம்பூர், புதூர் குடுமியான்மலை, முக்கணாமலைப்பட்டி, இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளியூர்களிலிருந்தும் திரளான பக்தர்கள் பக்தி மயத்தோடு கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள்.