தொடர்புடைய செய்திகள்
- மளிகை கடையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை...
- ஆகஸ்ட் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
- தீக்குண்டத்தில் 1 வயது குழந்தையுடன் நெருப்பில் விழுந்த தந்தை...அதிர்ச்சி சம்பவம்
- கூடங்குளம் போராட்டம்: 18 பேருக்கு 7 ஆண்டு சிறை! 3 பேர் விடுவிப்பு
- மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி வாக்குமூலம்..!
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் குளத்தில் குளித்தால் பாவங்கள்கூட விலகுமாம்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் குடத்தில் குளித்தால் அனைத்து பாவங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகமாக உள்ளது
இந்த குளத்தில் குளித்தால் எந்த விதமான கொடிய பிணி இருந்தாலும் அது தீரும் என்றும் தொழிலில் மேன்மை அடைவார்கள் என்றும் உலகை ஆளும் தகுதி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் மூன்று அமாவாசைகளுக்கு தொடர்ந்து வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகள் தீரும் என்றும் குறிப்பாக கை கால் வியாதி காய்ச்சல் ஆகியவை குணமாகிவிடும் என்று கூறப்படுகிறது.
வைகுண்ட ஏகாதேசி, தமிழ் ஆங்கில புத்தாண்டு, தை அமாவாசை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்களில் பக்தர்கள் அதிகமாக தரிசனம் செய்ய இங்கு வருவதுண்டு.
மேலும் இந்த தளத்தில் நேர்த்திக்கடன் என்பது மிகவும் விசேஷமானது. அதேபோல் உடம்பில் உள்ள மறுகாட்டி ஆகியவை மறைய இந்த தளத்தின் குளத்தில் பால் வெல்லம் ஆகிவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
