1. ஓம் ஸ்கந்தாய நம: – (மேகத்திலிருந்து மின்னல் வெளிபடுவது போல்) சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டு பிறகு ஒன்று சேர்ந்து ஒரு வடிவம் கொண்டதால் “ஸ்கந்தன்” என்று பெயர் அந்த ஸ்கந்தனுக்கு நமஸ்காரம்.
2. ஓம் குஹாய நம: – பக்தர்களின் இரு தயமாகிய குகையில் ஆத்ம சொரூபமாக இருக்கும் குகனுக்கு வணக்கம்.
3. ஓம் ஷண்முகாய நம: (தாமரை போன்ற) ஆறுமுகங்களுடைய கடவுளுக்கு வணக்கம்.
4. ஓம் பாலநேத்ரஸுதாய நம: – சிவனின் கண்களிலிருந்து தீப்பிழம்பாக வந்ததால் சிவனின் பிள்ளை.
5. ஓம் பிரபவே நம: – அனைத்தையும் அடக்கி ஆள்பவர்.
6. ஓம் பிங்களாய நம: – பொன்னிறம் கலந்த சிவப்பு நிறம் கொண்டவர்.
7. ஓம் க்ருத்திகாஸூநவே நம: – கிருத்திகை தேவதைகள் (கார்த்திகை பெண்கள்) என்ற ஆறுபேர் அவரை எடுத்து பாலூட்டினார்கள். எனவே கிருத்திகை பெண்களின் புதல்வன்.
8. ஓம் சிகி வாஹநாய நம: – மயிலை வாகனமாக உடையவர்.
9. ஓம் த்விஷட்புஜாய நம: – பன்னிரண்டு (வலிமை பொருந்திய) தோள்களை உடையவர்.
10. ஓம் த்விஷண்ணேத்ராய நம: – பன்னிரண்டு விதமான தெய்வீக குணங்களைத் தமது பக்தர்களுக்கு அருளும் மகிமை பெற்ற பன்னிரண்டு கண்களை உடையவர்.
11. ஓம் சக்திதராய நம :- பராசக்தியின் ஞான சொரூபமாகிய வேல் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தியவர்.
12. ஓம் பிசிதாச-பிரபஞ்ஜனாய நம: – பிசாசு, நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள் போன்றவர்களின் பலத்தைத் தகர்த்து எறிந்து அழிப்பவர்.
13. ஓம் தாரகாஸூர-ஸம் ஹாராய நம: – தாரகன் என்ற அசுரனை அழித்தவர்.
14. ரக்ஷோபல விமர்த்தனாய நமஹ: – ராக்ஷஸ சேனையின் பலத்தை அழித்தவர்.
15. ஓம் மத்தாய நமஹ: – மதம் பிடித்தவர் போல் யுத்தம் செய்பவர்.
16. ஓம் ப்ரமத்தனாய நமஹ: – மிகவும் வெறி பிடித்தவர் போல் பயங்கரமாக யுத்தம் செய்து எதிரி சேனைகளை அழித்தவர். (தன்னிடம் சரண் புகுந்தவர்களின் பக்தியில் சிறிதேனும் ஊக்க குறைவு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றி கைத்தூக்கிவிடும் இயல்புடையவர்.)
17. ஓம் உன்மத்தாய நமஹ: – தனது பராக்கிரமத்தில் மிகவும் தன்னம்பிக்கையுடன் போர் புரிபவர்.அல்லது (யோக நிஷ்டையில் யோகேஸ்வர்ராக இருப்பவர்.)
18. ஓம் ஸுர ஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ: – தேவர்களின் சேனையை நன்றாக காப்பாற்றியவர்.
19. ஓம் தேவசேனாபதயே நமஹ: – தேவசேனையின் (தெய்வானையின்) கணவர்.
20. ஓம் ப்ராஜ்ஞாய நமஹ: – ஆத்ம ஞானத்தின் வடிவமாக இருப்பவர்.