வியாழன், 8 ஜனவரி 2026
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (17:38 IST)

ஆத்மா பலம் பெற உதவும் ஸ்ரீசாய் சத்சரிதம் !!

ஆத்மா பலம் பெற உதவும் ஸ்ரீசாய் சத்சரிதம் !!
யார் ஒருவர் ஸ்ரீசாய் சத்சரிதத்தை ஆத்மார்த்தமாக மனதுக்குள் உள்வாங்கிப் படிக்கிறாரோ, அவரது ஆத்மா பலம் பெறும். பாபாவுடனே வாழ்வது போன்ற நிலைக்கு அது அவரை உயர்த்தும்.


சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் அவதாரமாக, கலியுகத்தில் தோன்றிய மகான்களின் ஒருவர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா. ததாத்ரேய அவதாரமான பாபா ஷீரதிக்கு பாலகனாக வந்தார், மக்கள் குறைகளை நீக்கினார், சந்தோஷத்தை நிலவிட செய்தார்.

மனித வாழ்க்கையில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் நாம் அதில் மூழ்கிவிடாமல் இருக்க கடவுளின் அருள் அவசியமாகிறது. கஷ்டங்களைப்போக்க எளிய வழி மகான்களை வணங்குவது. அப்படிப்பட்ட அற்புதமான மகான் சாய் பாபா.

உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள். உடல் ரீதியான பிரச்னைக்கும், மனரீதியான பிரச்னைக்கும் நீங்கள் பிராத்தனை செய்யுங்கள். பாபா உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டும் நம்புங்கள்.