பித்ரு வழிபாடு செய்யாமல் இருப்பதால் பாதிப்புகள் ஏற்படுமா?

Sasikala|
பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்காது. மிகவும் தாமதமாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்யம் இருக்காது. அல்லது குழந்தை பாக்கியம் இருக்காது.

 
ஒரு சிலருக்கு கடிமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை  திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.
 
கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றோருக்கு தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.  கருச்சிதைவு செய்து  கொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும்.
 
ஒருவரின் இளையதாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள்  இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல் திவசம் செய்ய வேண்டும்.
 
இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது. சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து  விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல உள்ளன. 
 
பரிகாரங்கள்:
 
ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளையும், பரிகாரங்களையும் செய்பவர்கள்தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். 
 
பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் கோவில், கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும்  நிச்சயமாக பலன்கள் கிடைக்கப்போவதில்லை.


இதில் மேலும் படிக்கவும் :