வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (18:43 IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி: தேதியை அறிவித்த தேவஸ்தானம்..!

Sashti
திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு அடுத்த வாரம்  கந்த சஷ்டி திருவிழா நடத்தப்படும் நிலையில் இந்த ஆண்டு நடத்தப்படும் கந்த சஷ்டி திருவிழா தேதியை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 13ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 கந்த சஷ்டி திருவிழாவின் அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றும் குறிப்பாக  கடற்கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியின் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்  

கந்த சஷ்டி திருவிழாவின் ஏழாவது நாள் தெய்வானை அம்மாள் தவசு காட்சிக்கு புறப்படுதல்,  எட்டாவது நாள்  சுவாமி தங்கமயில் வாகனத்தில் செல்தல் மற்றும் பூப்பல்லாக்கு 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களும்  தினமும் மாலையில் முருகன் மற்றும் தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran