1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (18:59 IST)

குடும்பத்தில் ஒற்றுமை இல்லை இல்லையா? உடனே வீரபத்திரசுவாமி திருக்கோவிலுக்கு செல்லுங்கள்..!

குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் மன நிம்மதி இல்லாமல் இருந்தால் சேலம் அருகே உள்ள வீரபத்திர சுவாமி கோவிலுக்கு சென்றால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.  

சேலம் பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வீரபத்ர சுவாமி கோயிலில் சிவலிங்கம் தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர் ஜங்கமேஸ்வரர் என்றும் அழைக்கப்படுவதோடு, வீரபத்திரராகவே  பாவித்து பூஜை செய்கின்றனர்.

ஐப்பசி பௌர்ணமியில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும் என்பதும்  புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இங்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப ஒற்றுமை மேலோங்க குடும்பத்தில் உள்ளவர்களிடையே சண்டை சச்சரவு இருந்தால் இந்த கோவிலுக்கு சென்றால் உடனே இந்த குடும்ப ஒற்றுமை மேலோங்கும் என்று நம்பிக்கையாக உள்ளது.

சிவராத்திரி நவராத்திரி திருவாதிரை ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும் என்றும் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிந்து  நேர்த்திக்கடனை செலுத்தும் வழக்கமும் இங்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது


Edited by Mahendran