செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (18:36 IST)

6 ஆண்டுகளாக கோவிலுக்கு வந்து தோகை விரித்தாடும் மயில்.. ஆச்சரிய தகவல்..!

மங்களூர் அருகே உள்ள ஒரு கோவிலில் தினமும் மயில் ஒன்று வந்து தொகை விரித்தாடி செல்வதாகவும் இது ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறப்படுவது அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் ஆச்சரியமான தகவலாக உள்ளது. 
 
கர்நாடக மாநிலம் மங்களூரில் அருகே உள்ள மானூர் என்ற கிராமத்தில் அனந்த பத்மநாப சுப்பிரமணியர் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் மயில் ஒன்று தினமும் வந்து தோகையை விரித்து நடனம் ஆடுகின்றதாம்.
 
அதை பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர். 6 ஆண்டுகளாக தொடர்ந்து நடனமாடி வரும் மயிலுக்கு அந்த கோவிலின் அர்ச்சகர் வெள்ளி கொலுசு அணிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தினமும் இரவு பூஜை நடைபெறும் போது இந்த மயில் தவறாது வருவதாகவும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மயிலை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த ஆச்சரிய தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran