நாடி ஜோதிடத்தில் சொல்லப்படும் காண்டங்கள் கூறுவது என்ன?

Sasikala|
நாடி என்றால் ஓலை. அதாவது ஒருவரைப் பற்றி அவை பிறப்பதற்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட ஏடு என்பதே நாடி ஜோதிடம்  என்பதன் முழுமையான அர்த்தமாகும். நாடி ஜோதிடத்தின் கணித முறைகளும், பலன்களும் பாடல் வடிவாகவே அமைந்திருப்பதைக் காணலாம். அகத்தியர்கள் பலர் எழுதியதாக நம்பப்படும், இந்த ஏடுகள் 12 காண்டங்களும், 4 தனிக்  காண்டங்கள் பற்றியும் கூறுகிறது.

 
சுவடியில் உள்ள காண்டங்கள் எதைக் குறிக்கிறது?
 
முதல் காண்டம் - வாழ்க்கையின் பொதுப்பலன்கள்.
 
இரண்டாம் காண்டம் - குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் ஆகியவற்றின் பலன்.
 
மூன்றாம் காண்டம் - சகோதரர்கள் தொடர்பான விடயங்கள்.
 
நான்காவது காண்டம் - தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு மறும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றிய தகவல்.
 
ஐந்தாம் காண்டம் - பிள்ளைகள் பற்றி கூறுகிறது.
 
ஆறாம் காண்டம் - வாழ்க்கையில் உள்ள எதிரிகள், நோய், கடன் பற்றி கூறுகிறது.
 
ஏழாம் காண்டம் - திருமணம் மற்றும் வாழ்க்கைத்துணை பற்று கூறுகிறது.
 
எட்டாம் காண்டம் - உயிர்வாழும் காலம், ஆபத்துக்கள் பற்றி கூறுகிறது.
 
ஒன்பதாம் காண்டம் - தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுகிறது.
 
பத்தாவது காண்டம்  - தொழில் பற்றி கூறுகிறது.
 
பதினோராம் காண்டம் - லாபங்கள் பற்றி கூறுகிறது.
 
பன்னிரண்டாம் காண்டம் - செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் பற்றி கூறுகிறது.
 
தனி காண்டம் கூறுவது என்ன?
 
சாந்தி காண்டம் - வாழ்வில் உள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றிற்கான பரிகாரங்கள் பற்றி கூறுகிறது.
 
தீட்சை காண்டம் - மந்திரம், யந்திரம் போன்றவை பற்றி கூறுகிறது.
 
ஔஷத காண்டம் - மருத்துவம் பற்றி கூறுகிறது.
 
திசாபுத்தி காண்டம் - வாழ்க்கையில் நடக்கும் திசைகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி கூறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :